ஹைதராபாத் கிடங்கில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி
புதன், 23 மார்ச் 2022 (10:22 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூலித் தொழிலாளிர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் தங்கி இருந்த தொழிலார்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.