என்னைய டார்ச்சர் பண்ணுறபோது இது தெரியலையா?! – முன்னாள் துணை முதல்வர் கேள்வி!

புதன், 29 ஜனவரி 2020 (13:29 IST)
தனியார் செய்தி சேனல் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டது குறித்து பீகார் முன்னாள் துணை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி பயணித்து கொண்டிருந்திருக்கிறார். அவர் அருகே வந்த காமெடி பேச்சாளர் குணால் காம்ரா அவரிடம் ஏதோ கேள்வி கேட்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார் காம்ரா.

அதை வீடியோ எடுத்து கோஸ்வாமி ட்விட்டரில் பதிவிட்டதால் காம்ரா விமான பயணம் மேற்கொள்ள ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. விமானத்தில் தேவையற்ற விவாதத்தில் ஈடுபட்டதாக காம்ரா மீது அர்னாப் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜச்வி யாதவ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விமானத்தில் சென்று கொண்டிருந்த தேஜஸ்வியை அர்னாப் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கிறார். விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இப்படிதான் கேள்வி கேட்பீர்களா? இது அதற்கான இடமில்லை என தேஜஸ்வி வலியுறுத்தியும் அந்த பெண் விடுவதாய் இல்லை. விமானத்தில் உள்ள பணிப்பெண்கள் இருக்கையில் அமர சொல்லியும் பெண் நிருபர் தொடர்ந்து தேஜஸ்வியை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த காணொளியை கொண்டு அர்னாப் தனது நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.

இதை குறிப்பிட்டு பேசியுள்ள தேஜஸ்வி ”அன்பு பத்திரிக்கையாளர்களே ஒரு அரசியல்வாதி மீது தவறான பிம்பத்தை எளிதில் உருவாக்கிவிடலாம். ஆனால் அரசியல்வாதியாக உங்களால் வாழ முடியாது. எங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை உங்களுக்கு மட்டும் உண்டு. நாங்கள் மக்களுக்காக நன்றி எதிர்பார்க்காமல் உழைக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.

மேலும் இதுபோன்ற நிருபர்கள் மேலதிகாரிகளின் பூட்ஸுகளை நக்கி வாழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்களை தேஜச்வி இழிவுப்படுத்தியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Dear Journalist, It’s easy to abuse politicians but difficult to live their life. We don’t hv any privacy anywhere but u hv. We are into a great thankless job of serving people & u r in bootlicking job of pleasing ur paymasters. Who’s brat of Whom country knows it inside out? https://t.co/eJiifxKxHP

— Tejashwi Yadav (@yadavtejashwi) January 29, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்