மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான அர்னாப் கோஸ்வாமி பயணித்து கொண்டிருந்திருக்கிறார். அவர் அருகே வந்த காமெடி பேச்சாளர் குணால் காம்ரா திடீரென கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார்.
ஆனால் இதற்கு சற்றும் அதிர்ச்சியடையாத கோஸ்வாமி அமைதியாக காம்ரா திட்டுவதை தனது மொபைலில் பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் பேசிய காம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.