பட்ஜெட் 2020; பொருளாதார வளர்ச்சியை புதுப்பிக்கும் வகையில் இருக்குமா? வல்லுநர்கள் கூறுவது என்ன?

Arun Prasath

செவ்வாய், 28 ஜனவரி 2020 (19:54 IST)
வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை புதுப்பிக்க செலவினங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை புதுப்பிக்க செலவினங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த மாதங்களில் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பல காட்டமாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் வரிகளை குறைப்பது அல்லது அரசு நிதி தூண்டுதல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றால் பொருளாதாரம் புதுப்பிக்க வழிவகுக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்