எல்லோரும் தமிழ்நாடு தினம் கொண்டாடுங்கள்: டில்லி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (05:09 IST)
நீட் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் மோடியின் பெயர் தமிழ்நாட்டில் டேமேஜ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் வடமாநிலத்தில் நடந்த ஒரு விழாவில், 'அனைவரும் தமிழ்நாடு தினம், கேரள தினம் கொண்டாட வேண்டும்' என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.



 
 
அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டை முன்னிட்டு டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ':வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.
 
தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.
 
அந்த நாளில், அந்தந்த மாநிலத்தின் உடையை அணிந்தும், அந்த மாநில மொழியில் பாடல் பாடியும், நடனமாடியும் கொண்டாடலாம். தமிழகம், கேரளாவில் உள்ளதுபோல், கைகளால் அரிசி சாதத்தை சாப்பிடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்; இது முடியாத விஷயமல்ல. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால், இது சாத்தியமே' என்று பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்