குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட 59 வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக ஜனவரி 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.