ட்விட்டரை பொறுத்தவரை இந்தியாவின் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் இந்தியா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தாலும் தலைமையிலிருந்து தெளிவான ஒப்புதல் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ள நீண்ட இழுபறிக்குப் பின் டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது.