கவிதாவுக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

Mahendran

திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:03 IST)
மதுபான ஊழல் வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதாவுக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் 
ஆனால் ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் 
 
ஆனால் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்கும் நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,  முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோதியா ஆகியோர்களுடன் இணைந்து கவிதா சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என கவிதா தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்