30 வருட வழக்கு முடிவுக்கு வந்தது: சிறை செல்கிறார் சித்து!

வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:19 IST)
பாஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து மீதான கொலை வழக்கு 30 ஆண்டுகள் இழுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டு சித்து சிறை செல்வது உறுதியாகி உள்ளது. 
 
கடந்த 1988 ஆம் ஆண்டு சித்து, குர்னாம்சிங் என்ற முதியவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு ஒரு கட்டத்தில் அவரை தாக்கினார். இதில் காயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
எனவே, சித்து மீது கொலை வழக்கு போடப்பட்டு பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் இந்த வழக்கின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
ஆனால், முதியவர் சித்து தாக்கி மரணமடையவில்லை மாரடைப்பால்தான் இறந்தார் என சித்து தரப்பில் வாதிடப்பட்டது. மறுதரப்பில் சித்து தாக்கியதில் முதியவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால்தான் மரணமடைந்தார் என கூறப்பட்டது. 
 
இந்த வழக்கு சுமார் 30 ஆண்டுகள் இழுக்கப்பட்டது. தற்போது நேற்று மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முன்னர் வழங்கிய தீர்ப்பின் படி சித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இதனால், சித்து சிறை செல்வது உறுதியாகியுள்ள நிலையில், பஞ்சாப் அரசே வாதாடி தண்டனையை உறுதி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்