இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சி குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன் தனது முதல் பணியாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு வழங்க தயார் என்றும் அறிவித்துள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.