உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 10 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இந்த போர் குறித்து ரஷ்யாவை சேர்ந்தவர்களே ரஷ்யாவை விமர்சித்து வருகின்றனர். ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினரும், கோடீஸ்வரருமான பாவெல் ஜென்ரிகோவிச் ஆண்டோவ் என்பவர் அவ்வாறாக போர் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சித்திருந்தார்.
சமீபத்தில் இந்தியாவில் உள்ள ஒடிசாவுக்கு ஆண்டோவ் சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக தவறி விழுந்து இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அவரது குடும்பத்தினரின் அனுமதி பெற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.