ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புரமோத்குமார் என்பவர் தன்னுடைய லாரி பெர்மிட்டை புதுப்பிக்க போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அந்த அலுவலகத்தின் பதிவேட்டின் படி ரூபாய் 1000 அபராத தொகை நிலுவையில் இருந்ததாக தெரிகிறது. அபராத தொகை எதற்கு என புரமோத்குமார் கேள்வி கேட்ட போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த லாரியை ஓட்டி வருவதாகவும் தண்ணீர் விநியோகிக்கும் பணியை செய்து வருவதாகவும் பெர்மிட்டை புதுப்பிக்க வந்த போது ஹெல்மெட் அணியாமல் லாரி ஓட்டியதற்காக அபராதம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்