RRB Recruitment: ரயில்வே துறையில் 7951 வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

Prasanth Karthick

ஞாயிறு, 28 ஜூலை 2024 (11:58 IST)

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான 7951 வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான RRB அறிவித்துள்ளது.

 

 

இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான ரயில்கள் பல வழித்தடங்களில் பயணித்து வரும் நிலையில், மத்திய அரசின் அதிகமான ஊழியர்கள் பணிபுரியும் பொதுத்துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. ரயில்வே துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான RRB (Railway Recruitment Board) அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேயில் ஜூனியர் பொறியாளர், டிப்போ மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 

ALSO READ: மனைவியுடன் சண்டை! மாமியார் வீட்டுக்கு போக பேருந்தை கடத்திய டிரைவர்! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
 

அதன்படி, ரசாயனம் உலோகவியல் உதவியாளர், ஆய்வாளர் பணியிடங்களுக்கு 17 பேர் சேர்க்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆரம்ப சம்பளம் ரூ.44,900 என்று கூறப்பட்டுள்ளது. இளநிலை பொறியாளர், டிப்போ மேற்பார்வையாளர் பணிகளுக்கு 7934 பேர் சேர்க்கப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு ரூ.35,400 முதல் சம்பளமும் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 - 36 ஆகும்.

 

ஜூலை 30ம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, கடைசி தேதி 29.08.2024 ஆகும்.

 

மேலதிக விவரங்களை காண: https://www.rrbchennai.gov.in/

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்