"உர்ஜித் பட்டேலின் ராஜினாமவை மிகுந்த கவலையுடன் அரசு ஏற்றுக்கொள்வதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். உர்ஜித் பட்டேல் தனது ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவுக்கு காரணம் என்ன என்பதை குறிப்பிடவில்லை என்பதும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உர்ஜித் பட்டேல் அவர்களுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தற்போது ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தனது 12 அம்சத் திட்டத்திற்காக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு உர்ஜித் பட்டேல் உடன்பாடில்லை என்று தெரிவித்ததாகவும், அதன் காரணமாக உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.