ஏர் இந்தியா பயணிகளை வரவேற்கும் ரத்தன் டாடாவின் குரல்!

புதன், 2 பிப்ரவரி 2022 (19:29 IST)
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் ஏறியவுடன் அவர்களை வரவேற்கும் விதமாக ரத்தன் டாடாவின் குரல் ஒலிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை 18,000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடா குழுமத்துடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏர்-இந்தியா விமானத்தில் பயணிகள் ஏறியவுடன் ரத்தன் டாடாவின் குரல் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
அதில் டாட்டா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கிறது என்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை விமான பயணிகள் விரும்பி தேர்வு செய்யும் நிறுவனமாக மாற்ற போவதில் மகிழ்ச்சி கொண்டுள்ளது என்றும் பயணிகளுக்கான சேவை மற்றும் செளகரியங்கள் மூலம் இது நிறைவேறும் என்றும் ரத்தன் டாட்டா பேசியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்