கர்நாடக மாநிலம் பெங்களூரில் பீன்யா என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தவர் ஷாலினி (21). இக்கல்லூரின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டி, சில பெண்கள் ’ராம்ப் வாக்’ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதில், ஷாலினியும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார். அதனால் அங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.