இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி பிரசவத்துக்காக சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் போதிய அளவு ரத்தம் இல்லாததால் சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.இப்படியிருக்கு ராஜேந்திரன் சரிசர வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஷாலினி, தன் சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தன் வீட்டுக்கு வரும் படி, ராஜேந்திரன் அவரை அழைத்துள்ளார். அதற்கு வேலைக்குச் செல்லாதவனுடன் என் மகளை அனுப்ப முடியாது என ஷாலினியின் தாய் மீனா கூறியுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த தங்கமணி, ராஜேந்திரனிடன் விசாரித்துள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாஜ்கி உள்ளது. இதில் ராஜேந்திரனின் முதுகிலும் , வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார் தங்கமணி. பின்னர், ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் தங்கமணியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.