மேலும் திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 21 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகலை நீட் தேர்வு கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள். அரசு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனோடு #POSTPONENEETPG2022 என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.