வங்கதேசத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இந்தியா நோக்கி வரும் கைதிகள்?? - அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (11:21 IST)

வங்கதேசத்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் ஆட்சி மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்குள்ள சிறையிலிருந்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 வங்கதேசத்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.  நிலையில் வங்கதேசத்தில் பல பகுதிகளிலும் போராட்டமும்  கலவரமும் ஆக இருந்து வருகிறது. 

இந்திய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் அப்பால் உள்ள வங்கதேச பகுதியில் அமைந்துள்ள பாரிய சிறையில் ஏற்பட்ட மோதலில் சிறையை உடைத்துக் கொண்டு 518 கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.  இந்த கைதிகளிடம் பயங்கரமான ஆயுதங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தப்பி ஓடியவர்களில் 20 பேர்  சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

 

 இந்த சிறைச்சாலை இந்திய எல்லைக்கு அருகில் உள்ளதால் இந்திய எல்லைப் பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எல்லை பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளதுடன் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்