குடியரசுத்தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு முன்னிலை

வியாழன், 21 ஜூலை 2022 (15:31 IST)
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
மொத்தம் 763 எம்பிக்களின் வாக்குகள் முதல்கட்டமாக எண்ணப்பட்டது என்றும் அதன்பிறகு எம்எல்ஏக்களின் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள 
 
இந்த நிலையில் முதல்  சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இனி அடுத்தடுத்து வரும் சுற்றுகளிலும் முன்னிலை பெற்று அவர் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவி ஏற்பாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
 
திரெளபதி முர்முவுக்கு 540 எம்பிக்களும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்