ஜனாதிபதி தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்ட முன்னாள் பிரதமர்

திங்கள், 18 ஜூலை 2022 (18:03 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டார்.
 
குடியரசு தலைவர் தேர்தல் இன்று நாடு முழுவதும் நடந்த நிலையில் அனைத்து மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபா உறுபினர் என்பதால் அவர் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் வந்தார். அவர் ஓட்டு போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் திரெளபதி முர்மு என்ற வேட்பாளரும் எதிர்க் கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா என்ற வேட்பாளரும் போட்டியிடுகின்றனர் 
 
சற்றுமுன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்