துபாய்க்கு தப்பி சென்றாரா பூஜா கேத்கர்: காவல்துறை விளக்கம்

Mahendran

சனி, 3 ஆகஸ்ட் 2024 (15:40 IST)
ஐஏஎஸ் பயிற்சி ரத்து செய்யப்பட்ட பூஜா கேத்கர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவரது ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்த போது பூஜா கேத்கர்  வெளிநாடு சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரை கைது செய்ய தேடி வருகிறோம் என்றும் ஆனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் இந்தியாவில் தான் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே பூஜா கேத்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்