இந்தியாவில் 20,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 652 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். 3,960 பேர் குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலம் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், புஜ்ரா பகுதியில் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இங்கு, அனுமதியின் படி கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க சோதனை செய்ய போலீஸார் ரோந்து வந்தனர்.
அப்போது, காய்கறி விற்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே தகராறு இருந்ததாகத் தெரிகிறது. அதை தடுக்க முற்பட்ட போலீசார் மீது உள்ளூரில் வசிக்கும் மக்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.