அதோடு தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், அம்மா…இது வெறும் வார்த்தையல்ல, ஆனால் பலவிதமான உணர்ச்சிகளைப் படம் பிடிக்கிறது. இன்று ஜூன் 18 என் அன்னை ஹீராபா தனது 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். இந்த சிறப்பு நாளில், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சில எண்ணங்களை எழுதியுள்ளேன் என தனது தாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இன்றைய தினம் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாட்நகரில் உள்ள கோவிலில் ஹிராபா மோடியின் நலனுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. மேலும் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பிரதமர் மோடியின் தயார் ஹிராபா மோடியின் பெயர் சூட்டப்பட உள்ளது. பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.