இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனிமேல் அமைச்சரவை கூட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உளவுத்துறைகளால், தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், முக்கிய துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய செல்ஃபோன்களை அரசு கம்யூட்டர்கள் மற்றும் மடிக்கணினிகளில் இணைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.