ஐ.நாவில் ஒளிபரப்பாகும் 100வது மன் கீ பாத் நிகழ்ச்சி! – என்ன பேசப்போகிறார் பிரதமர்?

ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:43 IST)
மாதம்தோறும் வானொலி வழியாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வரும் “மன் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியின் 100வது ஒளிபரப்பு இன்று நடக்க உள்ளது.

கடந்த 2016ல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் மக்களிடம் வானொலி வழியாக “மன் கீ பாத் (மனதின் குரல்)” நிகழ்ச்சி மூலம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, மாணவர்களிடம் தொலைபேசி வழியாக உரையாடுதல், வித்தியாசமான போற்றத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களை பாராட்டுதல் ஆகிய பலவற்றை செய்துள்ளார்.

இன்று பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி 100வது நேரலை ஒளிபரப்பாக உள்ளது. இந்த 100வது மன் கீ பாத் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் பேசுவது ஐ.நா தலைமை செயலகத்திலும் ஒலிபரப்பப்பட உள்ளது. இந்திய நேரப்படி காலை 11 – 11.30 மணி வரை ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஐ.நா சபையில் அமெரிக்க நேரப்படி 1.30க்கு ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியால் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று 100வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்