இந்தியாவிற்கு அனைத்து மருந்துகளும் இலவசம்! – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

திங்கள், 3 மே 2021 (17:39 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா பிரச்சினையில் உதவ உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி நிறுவனமான பைசர் நிறுவனம் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பைசர் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் இந்தியா அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்