திடீரென 9 ரூபாய் குறைந்த பெட்ரோல் விலை: இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

வெள்ளி, 15 ஜூன் 2018 (08:17 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்ததால் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.80க்கும் மேல் விற்பனையாகி வரும் நிலையில் திடீரென பெட்ரோல் விலை ரூ.9 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒருசில பெட்ரோல் பங்குகளில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருந்து வரும் ராஜ் தாக்கரே அவர்களுக்கு இன்று 50 வது பிறந்தநாள். அரை சதம் போட்ட ராஜ்தாக்கரே தனது பிறந்த நாளின்போது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினார். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒருசில குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 4 ரூபாய் முதல் 9 ரூபாய் வரையில் குறைத்து வழங்க ராஜ்தாக்கரே ஏற்பாடு செய்தார். 
 
இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து விலை குறைப்பு செய்த  பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்