அதில் எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பெற்றுவருபவர்களில் யாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் கட்டாயமாக தேவை என்பதைத் தெரிந்துகொள்ள ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்தினோம். உடனே 22 நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் எல்லாம் பிழைப்பது கடினம் என்று தெரிந்துகொண்டோம். இதை அவர்களுக்கு உணரவைத்து, மற்ற நோயாளிகளை ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்து வர சொல்லி வலியுறுத்தினோம் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பரவி கண்டனங்களை எழுப்பியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.