உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவர், சிறுமிக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த உதயநிதி

புதன், 9 ஜூன் 2021 (22:19 IST)
சென்னை ராயப்பேட்டை சேர்ந்த சிறுவன் 9 வயது சிறுவன் ஒருவர் மற்றும் 9 வயது சிறுமி ஒருவரும் தாங்கள் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியிடம் கொடுத்தனர் 
 
இந்தநிலையில் அந்த சிறுவனுக்கும் சிறுமிக்கும் உதயநிதி ஸ்டாலின் தலா ஒரு சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த 7ஆம் தேதி உதயநிதி இதுகுறித்து உதயநிதி கடந்த 7ம் தேதியும் இன்றும் பதிவு செய்த ட்வீட்டுகள் பின்வருமாறு
 
ராயப்பேட்டை,பெருமாள் தெரு பகுதியை சேர்ந்த 115-வது வட்ட துணை அமைப்பாளர் சகோதரர் ராமன்- ஜனனி அவர்களின் மகன் தனுஷ்(9), மகள் தன்யஶ்ரீ(9) ஆகியோர் தங்களின் உண்டியல் சேமிப்பு தொகையை  கொரோனா நிவாரண பணிக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினர்.நன்றி
 
ராயப்பேட்டை பெருமாள் தெருவைச் சேர்ந்த சிறுவன் தனுஷ், சிறுமி தன்யஸ்ரீ ஆகியோர் தங்களது உண்டியல் சேமிப்பை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு அண்மையில் என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு தலா ஒரு சைக்கிளை இன்று பரிசளித்தேன். இருவருக்கும் என் வாழ்த்துகள்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்