நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இணைந்ததால் பரபரப்ப்பு!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:44 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எம்எல்ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அருணாசல பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அக் கட்சியைச் சேர்ந்த ஒரே எம்எல்ஏ அவர்தான் என்ற நிலையில் அந்த ஒரு எம்எல்ஏவும் பாஜக தலைவர் முன்னிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டார்
 
இதனை அடுத்து 60 உறுப்பினர்களை கொண்ட அருணாசலப் பிரதேச சபையில் ஆளும் கட்சியான பாஜகவின் பலம் 49 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்