குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் சுமார் பத்தாயிரம் பேர் வரை தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கடந்த இருபத்தைந்து நாட்களில் மும்பையில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிகிறது
நேற்று மும்பையில் 5888 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் 30 ஆம் தேதிக்கு பின் நேற்றுதான் குறைவான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் படிப்படியாக கொரோனா வைரஸ் குறையும் வாய்ப்பு இருப்பதால் முழு ஊரடங்கு மேலும் நீடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது