இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே அவரது உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.