கொரோனா அதிகம் பரவும் 10 மாநிலங்கள்: அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:06 IST)
எனவே, கொரோனா அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,36,89,453 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,71,058 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 12,64,698 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனிடையே, இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே, கொரோனா அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களுக்கு தடுப்பூசியை அதிகமாக வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்