பதவியை தக்க வைத்துக்கொண்ட மம்தா!! இடைத்தேர்தலில் அமோக வெற்றி!

ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (15:32 IST)
மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி. 
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் என்பவர் போட்டியிட்டார். 
 
இன்றைய இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்து தான் மம்தாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதும் இன்று அவர் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பவானிபூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 52,832 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றிப்பெற்றுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
 
மேலும் இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது வெற்றியை உறுதி செய்துள்ளதால் அவர் அம்மாநில முதல்வராக தொடர்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்