மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் சிவசேனா இணைந்து அமைக்க முயற்சித்த கூட்டணி ஆட்சி அமையவில்லை. இரு கட்சிகளும் தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த தகவலின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டனர். இந்த 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது