பிரபல நடிகை குட்டி ராதிகா தற்போது டிவிட்டர் மற்றும் கூகுள் தேடலில் டிரெண்டாகி வருகிறார். டிரெண்டாகும் அளவிற்கு இவர் செய்தது என்னவென்றால், கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமியை திருமணம் செய்ததுதான்.
எச்.டி.தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியின் இரண்டாவது மனைவிதான் நடிகை குட்டி ராதிகா. குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், இவரது மனைவியை குறித்த செய்திகளை பலர் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவரை, கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, யார் கண்ணிலும் படாமலிருந்த ராதிகா, குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்தில் வர, குழந்தையின் தந்தை குமாரசாமி என்று அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து தனக்கென்று ரசிகர்கள உருவாக்கிக்கொண்ட ராதிகா தற்போது, பைரவ தேவி, ராஜேந்திர பொன்னப்பா, நிமஹாகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.