நன்கொடையை மிரட்டி வாங்குவதா? RSS மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:43 IST)
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மிரட்டுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக பல தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், ராமர் கோயில் கடுமானப் பணிகளுக்கு நன்கொடை தராதவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மிரட்டுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், 
 
ராமருக்கு கோயில் கட்டுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், நன்கொடை வழங்கியவர்களையும், வழங்காதவர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பிரித்து வைத்து மிரட்டுவது ஜெர்மெனியில் நாஸிக்கள் செய்ததை போல இருப்பாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தானு,ம் மிரட்டலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்