கேரளா விமான விபத்து : இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு

சனி, 8 ஆகஸ்ட் 2020 (15:16 IST)
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.

விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு  தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூமி தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட அவர்,  பின்னர் கூறியதாவது :

விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 
தற்போது, அம் மாநில முதலவர் பினராயி விஜயன், கேரளாவில் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்