கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை பார்த்தார். இவர்களுடன் பத்தினம் திட்டா நகரசபை தலைவர் ரெஜினி பிரதீப், துணை தலைவர் ஜேக்கப் மற்றும் கவுன்சிலர்களுடன் படம் பார்த்தனர்.
கடந்த 22-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் உலகமெங்கும் வெளியான கபாலி திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு குறையவில்லை.