'ராகுல் காந்தியின் நடைப் பயணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' - பசவராஜ் பொம்மை

வியாழன், 6 அக்டோபர் 2022 (19:07 IST)
ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 
 
ராகுல்காந்தியின் ஒற்றுமை நடை பயணம் குறித்து கருத்து கேட்டபோது அதற்கு பதில் அளித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ராகுல் காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டாலும் வேறு யார் கலந்து கொண்டாலும் எந்தவித தாக்கத்தையும் கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் நடைபயணம் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்