திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் நான் ஹெலிகாப்டரில் செல்வதற்கு பாஜக காசு தருவதாக சொல்கிறார்கள். ஜிஎஸ்டி வரி விதித்தது முதல் நான் மத்திய அரசை விமர்சித்து வருகிறேன். அவர்களுக்கு ஒரு எம் எல் ஏ கூட கிடைக்கக் கூடாது என்பதற்காகதான் நான் தேடிப்பிடித்து ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு எப்படி அவர்கள் பணம் தருவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.