ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது GSLV-F14 ராக்கெட் .. கவுண்ட்-டவுன் தொடக்கம்..!

Siva

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:08 IST)
இஸ்ரோ வடிவமைத்துள்ள GSLV-F14 என்ற ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கும் நிலையில் அதன் கவுண்ட்-டவுன்  தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள அடுத்த ராக்கெட் GSLV-F14. இந்த ராக்கெட் பணிகள் முடிவடைந்து விண்ணில் ஏவ தயாராக இருக்கும் நிலையில் தற்போது இதன் கவுண்ட்-டவுன்  தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறதாகவும் இந்த கவுண்டவுன் இன்று தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை விண்ணில் பறக்க தயாராக உள்ள இந்த ராக்கெட்டின் எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்