கடந்த 2020 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது உருவான பாரதிய ஜனதா கூட்டணி, பீகார் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறப்படும் நிலையில் பீகார் மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் அடுத்தடுத்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையங்கள், தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் உள்ளிட்ட திட்டங்களை பீகார் மாநிலத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பீகார் மாநிலத்திற்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கைகளை ஏற்று பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப மையம், தொழில் முனைவு மற்றும் வேளாண்மை நிறுவனம் நிறுவப்பட்ட என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.