மணக்கோலத்திலும் வேலையில் ஆர்வம் காட்டிய பெண் ! வைரல் வீடியோ
சனி, 4 ஜூலை 2020 (17:45 IST)
கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், டேட்டா எண்ட்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளனர்,.
இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இந்த லாக்டவுண் காலத்தில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஒரு பெண் மணமேடையில் மணப்பெண் கோலத்தில் இருந்தபடி லேட்டாப்பைப் பார்த்து வேலை பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வரைல் ஆகி வருகிறது.
மேலும், புதுமாப்பிள்ளை அவரை வேடிக்கை பார்ப்பது தான் அனைவரும் அவரைப் பாவம்பரிதாபமாக கிண்டலித்து வருகின்றனர். அதேசமயம் மணப்பெண்ணில் ஆர்வத்தை பாராட்டி வருகின்ற்னர்.