எரிபொருள் தீர்ந்ததால் செயல்பாட்டை நிறுத்தியது இந்தியாவின் ‘மங்கள்யான்’

திங்கள், 3 அக்டோபர் 2022 (11:31 IST)
இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டிருந்த மங்கள்யான் என்ற செயற்கைக் கோள் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்தததை அடுத்து தனது செயல்பாட்டை நிறுத்தி கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் என்ற இந்தியாவின் செயற்கைக் கோள் நிறுத்தப்பட்டது
 
ரூ. 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த மங்கள்யான் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது என்பதும் இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் பல மர்மங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் செயற்கைக் கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததால் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்