ஒடிஷாவை சேர்ந்த பினக் மிஸ்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி, தனது அதிகாரத்தை மறந்து மக்களோடு மக்களாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றும், கையெடுத்து கும்பிட்டு உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார். அவருடைய பணிவான வேண்டுகோளினால் அந்த பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு மாறினர்
அதேபோல் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சொந்த மோட்டார் சைக்கிளில் தனது செலவில் பெட்ரோல் போட்டு புயல் பாதிக்கும் பகுதியில் உள்ளவர்களை வெளியேற்ற உதவினார். காவல்துறை உயரதிகாரி ஒருவர் பெண்களை புயல் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றபோது ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தை அழுது கொண்டிருந்ததால் அந்த குழந்தையை தனது கையில் வாங்கி ஒரு கிலோ மீட்டர் வரை அவர்களுடன் நடந்து வந்தார். முதியவர்கள் பலரை போலீசார்களே கைத்தாங்களாக தூக்கி வந்தனர்.