இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன பின்னர் மோடி, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது என அதிரடியாக தெரிவித்தார்.
பிரதமர் அறிவித்துள்ளதை வைத்து பார்க்கும் போது, இது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பகிரங்க போர் பிரகடனம் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி 19 ராணுவ வீரர்களை கொன்ற போது இந்திய ராணுவம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி அதிரடி காட்டியது.
இப்போது இதைவிட பலமான தாக்குதலுக்கு ராணுவம் தயாராகும் என தெரிகிறது. அதோடு, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.