23 வருட சலுகை கட்: இந்தியாவின் அதிரடி முடிவால் பாகிஸ்தான் ஷாக்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (12:56 IST)
காஷ்மீரில் நேற்று திடீரென்று பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 
 
இந்த தாக்குதலை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறை அமைச்சரவைக்கூட்டம் இன்று காலை அவசரமாக கூடியது. இதன் பின்னர் அருண் ஜெட்லி பேசியது பின்வருமாறு, 
 
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி ஆலோசித்தோம். வெளியுறவு அமைச்சகம் மூலம், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளோம். 
வணிகரீதியாக பாகிஸ்தான் தற்போது மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தில் உள்ளது. இந்தியா இந்த அந்தஸ்த்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தகவல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், வணிக அமைச்சகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தானுக்கு மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்து, 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்து வழங்கப்பட்டால், அந்த நாடுகளில் இருந்து எளிதாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். இந்த அந்தஸ்து கொண்ட நாட்டு பொருட்கள் மீது வரி குறைவாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்