தற்போது தனிநபர்களின் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் ஆக உள்ளது. 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை .ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளோர் 30% வரியும் செலுத்தி வருகின்றனர்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பை கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் உள்ளது தேர்தல் வர இருப்பதால் நடுத்தர வர்க்கத்தின் வாக்குகளைக் கணக்கில் வைத்து தனிநபர்களுக்கான வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோலவே வருமான வரி சதவீதத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.